விபத்து; 6 நாட்களின் பின் மரணமடைந்த சிறுவன் | தினகரன்


விபத்து; 6 நாட்களின் பின் மரணமடைந்த சிறுவன்

விபத்து; 6 நாட்களின் பின் மரணமடைந்த சிறுவன்-A Boy Death After 6 Days of the Accident-Kattankudy

மட்டக்களப்பு, கல்லடி அரச விடுதி வீதியில் கடந்த சனிக்கிழமை (30) இடம்பெற்ற வீதி விபத்தில் கல்லடியை சேர்ந்த தந்தையும் மகனும் தமது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வீடு திரும்பியபோது, அரச விடுதி சந்தியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர்களுடைய மோட்டார் சைக்கிளுடன் மோதியதனால் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த தந்தையும் மகனும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் அதற்கு அடுத்தநாள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் தொடர்ந்து நான்கு நாட்களாக சிறுவன் உணவு எதுவும் உட்கொள்ள முடியாத நிலையில் மீண்டும் நேற்றுமுன்தினம் (03) வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்த நிலையில் நேற்றையதினம் (04) வியாழக்கிழமை காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

குறித்த விபத்தினை ஏற்படுத்திய நபர்களை பொலிசார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)


Add new comment

Or log in with...