ஜனாதிபதியின் கடிதத் தலைப்பு, கையொப்பம் மோசடி; ஒருவர் கைது

ஜனாதிபதியின் கடிதத் தலைப்பு, கையொப்பம் மோசடி; ஒருவர் கைது-Man arrested For Forging Presidents Signature

பணி நீக்கம் செய்யப்பட்ட தன்னை சம்பள உயர்வு, பதவி உயர்வுடன் பணியில் இணைக்குமாறு கடிதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்தையும் கடிதத் தலைப்பையும் மோசடியாக பயன்படுத்திய ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் இலக்கம் 531, சுந்தராபொல வீதி, யந்தன்பலாவ, குருணாகல் எனும் முகவரியில் வதியும் ஈ.எம்.பீ.ஏ. குமார என்பவராகும்.

பணித் தடைக்கு உள்ளாகியுள்ள அவர் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பதவியுயர்வுகளுடன் மீண்டும் சேவையில் அமர்த்துமாறு குறிப்பிட்டு ஜனாதிபதியின் கடிதத் தலைப்பையும், ஜனாதிபதியின் கையொப்பத்துடன் எழுதப்பட்டுள்ள கடிதமொன்றையும் இலங்கை வங்கி தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அது போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று (03) குறித்த சந்தேகநபரை வங்கி தலைமையகத்திற்கு வங்கியின் தலைவரினால் அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஆவணத்தை தயார் செய்வதற்கு பயன்படுத்திய மடி கணினி மற்றும் பென் ட்ரைவ் உள்ளிட்ட உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர், இன்று (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 08 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...