கன்டருடன் விபத்து; மோ. சைக்கிளில் சென்ற இளைஞர் பலி | தினகரன்

கன்டருடன் விபத்து; மோ. சைக்கிளில் சென்ற இளைஞர் பலி

மட்டக்களப்பு,  பாசிக்குடா வீதியில் பேத்தாழையில் இன்று (03) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர்  ஒருவர் உயிாிழந்துள்ளதாக, கல்குடா பொலிசாா் தொிவித்தனா்.

பிறைந்துறைச்சேனை, வாழைச்சேனையைச் சோ்ந்த எம்.என். முகம்மது நைறுாஸ்  (18)  என்பவரே   இவ்வாறு உயிாிழந்துள்ளாா்.

குறித்த இளைஞர் வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து பாசிக்குடாவிற்கு மோட்டாா் சைக்கிளில் செல்லும்போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

எதிரே சென்ற சிறிய கன்டர்  வாகனம் சடுதியாக வீதியை விட்டு மறு பக்கம் செல்ல முற்படுகையில், பின்னால் சென்றவா் தமது வேகக் கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளாா்.

இதனால் கன்டர் வாகனத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

கல்குடா பொலிசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன்,  சந்தேகத்தின் போில் கன்டர் வாகனச் சாரதியை கைது செய்துள்ளனர். அத்தோடு, கன்டர் வாகனமும்  பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பாிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக, பொலிசாா் மேலும் தொிவித்தனா்.

(பாசிக்குடா நிருபா் – உருத்திரன் அனுருத்தன்)
 


Add new comment

Or log in with...