குணமடைந்த கடற்படையினர் 424ஆக அதிகரிப்பு

கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 09 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (02)  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி  இந்நோய்த் தொற்றினால் குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 424ஆக உயர்வடைந்துள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த 09 பேரில் 05 பேர் மினுவாங்கொடை வைத்தியசாலையிலும் 04 பேர் IDH வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளுக்கு அமைய குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து நேற்றையதினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மேலும் 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   


Add new comment

Or log in with...