ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி | தினகரன்


ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி

பொதுத்தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியென முன்னாள் பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் நேற்று தெரிவித்தார். தேர்தலை காலம் கடத்த மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டு ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தைக் கலைத்தல் மற்றும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு நேற்று உயர் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அங்கஜன் இராமநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...