வெளிநாட்டில் தொழில் புரிவோர் தொடர்பில் விரைவில் ஒப்பந்தம்

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையரின் பிரச்சினைகளை துரிதமாகத் தீர்ப்பதற்காக ஐ.நா தொழிலுக்காக புலம்பெயர்வு தொடர்பான சர்வதேச அமைப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திட இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதினூடாக வெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு வழங்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஜப்பான், கொரியா, மலேசியா போன்ற நாடுகளில் தொழில்புரியும் இலங்கையர் சில பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சுகாதாரம், உயிர் பாதுகாப்பை உறுதிசெய்தல், தொழில் ஊடாக ஈட்டிய வருமானத்தை அதிகரித்தல் என்பனவும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

ஓய்வூதிய யோசனை, சேமலாப நிதியம் மற்றும் அதற்கான வைப்பு நிதியை பெறுதல், பணம் அனுப்புகையில் அறவிடும் அதிக கட்டணத்தை குறைத்தல் என்பன தொடர்பில் வெளிவிவகார அமைச்சு, ஜ.நா.தொழிலுக்கான புலம்பெயர்வு தொடர்பான சர்வதேச அமைப்புடன் நெருக்கமாக செயற்படுவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.(பா)


Add new comment

Or log in with...