தேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுப்பதா? நாளை முடிவு | தினகரன்


தேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுப்பதா? நாளை முடிவு

தேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுப்பதா? நாளை முடிவு-General Election Petition-Grant Leave for FR Will be Announced Tomorrow

ஜூன் 20 பொதுத் தேர்தல் வர்த்தமானி அறிவிப்பு மற்றும் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்புகளை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு உட்படுத்துவதா என்பது தொடர்பான முடிவு நாளை (02) பிற்பகல் 3.00 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (01) 10ஆவது நாளாக இடம்பெற்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.

இது தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ப்பட்டபோது இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மனுக்கள் தொடர்பான விசாரணைக்கு முன்னர், கடந்த மே 18ஆம் திகதி முதல் இரு நாட்களுக்கு குறித்த மனுக்கள் மீதான பரிசீலனையை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 10 நாட்களாக இடம்பெற்ற பரசீலனைகளைத் தொடர்ந்து, தற்போது அதனை விசாரணைக்கு உட்படுத்துவதா, இல்லையா? என்பது தொடர்பில், பரீசீலனையின் போது முன்வைக்கப்பட்ட வாதி, பிரதிவாதி, இடையீட்டாளர்கள் ஆகிய தரப்பினரின் வாதங்களுக்கு அமைய நீதிபதிகள் குழாமினால் இம்முடிவு அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...