ஆறுமுகன் தொண்டமானின் அமைச்சு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு | தினகரன்


ஆறுமுகன் தொண்டமானின் அமைச்சு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு

ஆறுமுகன் தொண்டமானின் அமைச்சு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு-PM-Mahinda-Rajapaksa-Sworn-Rendered-Vacant-By-Aarumugan-Thondaman

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வகித்த, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரவை அமைச்சுப் பொறுப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (01) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆறுமுகன் தொண்டமானின் அமைச்சு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு-PM-Mahinda-Rajapaksa-Sworn-Rendered-Vacant-By-Aarumugan-Thondaman

பிரதமர் பதவியில் இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனம், நகர அபிவிருத்தி, மத விவகாரங்கள், கலாசார அலுவல்கள், வீடமைப்பு, நீர் வழங்கல் அமைச்சராக பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...