குரும்பசிட்டியிலுள்ள கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு

குரும்பசிட்டியிலுள்ள கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு-Mortar Shell Found-Valikamam-Jaffna

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

நேற்றையதினம் (28) குறித்த கிணற்றினை சுத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதற்குள் இவ்வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குரும்பசிட்டியிலுள்ள கிணற்றில் மோட்டார் குண்டுகள் மீட்பு-Mortar Shell Found-Valikamam-Jaffna

இச்சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விசேட அதிரடி படையினருடன் வந்த பொலிஸார் அங்கிருந்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...