கொழும்பு 02, 03, 07, 08, 09, 10 இல் நீர் வெட்டு | தினகரன்

கொழும்பு 02, 03, 07, 08, 09, 10 இல் நீர் வெட்டு

கொழும்பின் பல இடங்களில் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து 18 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்  சபை அறிவித்துள்ளது.

அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மாளிகாகந்த வரை   நீர் வழங்கும் குழாயில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதன் காரணமாக நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய கொம்பனித்தெரு (கொழும்பு -02), கொள்ளுப்பிட்டி (கொழும்பு -03), கறுவாத்தோட்டம் (கொழும்பு -07), பொரளை (கொழும்பு -08), தெமட்டகொடை (கொழும்பு -09), மருதானை, பஞ்சிகாவத்தை (கொழும்பு -10) ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கொழும்பு துறைமுகப் பகுதியில் (கொழும்பு -01) குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...