கரும் சிறுத்தை உயிரிழப்பு

நல்லதண்ணி, லக்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் கம்பி வலையில் சிக்குண்டு மீட்கப்பட்ட அரிய வகை கரும் சிறுத்தை இன்று (29)  காலை உயிரிழந்துள்ளது.

உடவளவ மிருக வைத்தியசாலையில் குறித்த கரும் சிறுத்தை உயிரிழந்துள்ளதாக, நல்லதண்ணி வனத்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கம்பி வலையில் சிக்கிய குறித்த கரும் சிறுத்தை காயங்களுடன் மீட்கப்பட்டு, உடவளவ மிருக வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இக்கரும் சிறுத்தையினமானது அரிய வகை சிறுத்தை இனமாகும். 

அத்துடன், இக்கரும் சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் விஞ்ஞானப் பெயர் : Panthera pardus kotiya

கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி மரமொன்றில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தையொன்றும் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 19ஆம் திகதி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர் - செ.தி. பெருமாள்)
 


Add new comment

Or log in with...