இணைய தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா ரெலிகொம் விளக்கம்

இணைய தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா ரெலிகொம் விளக்கம்-SLT Clarifies Situation Regarding Recent Cyber Attack

SLT யின் உள்ளக சேவைகள் மீது முயற்சிக்கப்பட்ட இணைய தாக்குதல் சம்பந்தமாக, SLT தனது சகல வாடிக்கையாளர்களுக்கும் தற்போதைய நிலைமை பற்றி விளக்கமளிக்க விரும்புகிறது.

இது தொடர்பில் அந்நிறுவனத்தின் முகாமைத்துவத்தினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பு வருமாறு,

எமது உள்ளக தகவல் தொழில்நுட்ப முறைமைகளின் ஒரு பகுதியை மாத்திரம் தாக்கிய இணைய தாக்குதல் சம்பந்தமான முயற்சியை SLT முறியடித்துள்ளது என்பது பற்றி எமது வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

எமது விழிப்புணர்வுடன் கூடிய முன்னெச்சரிக்கை முறைமைகளே இந்த முயற்சியைக் கண்டுபிடிக்கக் காரணமாகும். சில செயலி சேவை வழங்கல்களின் செயற்பாட்டை இடைநிறுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்பட்டன. இந்த செயலி சேவை வழங்குதல்கள் தனிமைப்படுத்தப்பட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டன. SLT சேவைகளை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் எந்த முறைமையிலும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இவ்வகையில் எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எந்தச் சேவைகளிலும் இடையூறுகள் எதுவும் ஏற்படவில்லை. அத்துடன், வாடிக்கையாளர்களின் தகவல்கள் தொடர்பாகவும் எவ்வித ஆபத்துக்களும் கிடையாது. இந்த விடயத்தில் முறைமை வல்லுநர்கள் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்கள், அனைத்து குறைகளையும் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். SLT யின் உள்ளக சேவைகள் குறுகிய காலத்தில் மீளமைக்கப்படும். எமது நிபுணர் குழுக்கள் இந்த அச்சுறுத்;தலை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து, இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாக தனிமைப்படுத்தியுள்ளனர்.

எமது அனைத்து அரசாங்க மற்றும் வணிக சேவைகள், குரல் வழி சேவைகள், புரோட்பாண்ட் சேவைகள், பியோ வுஏ மற்றும் தொகுதி சேவைகள் என்பன இந்த உள்ளக பிரச்சினை காரணமாக எவ்வித தாக்கத்திற்கும் உட்படவில்லை என்பதையும், எமது வாடிக்கையாளர்களின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன என்பதையும் SLT உறுதிப்படுத்த விரும்புகிறது.

புரோட்பாண்ட் சேவைகளுக்கு மிகைப்படியான நிதியை வேண்டுதல் போன்ற பெறுமதிகூடிய சேவைகள் ஒன்லைன் மூலம் ஆலSLT யிp ஊடாகவும் 1212 என்ற இலக்கத்தை தொடர்புகொள்வதன் மூலமும் வழங்கப்படுகிறது.

காலத்திற்குக் காலம் உலகம் பூராகவும் தகவல் தொழில்நுட்ப முறைமைகளைப் பாதித்து வரும் ஒரு சுநுஎடை தாக்குதல் இதற்குக் காரணமாகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய பயங்கரமான இவ்வகையான இணைய தாக்குதல்களைக் கருத்திற் கொண்டு சாத்தியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இயன்றளவில் மேற்கொள்ளுமாறு நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகின்றோம்.

உங்களுடைய பொறுமைக்கும், புரிந்துணர்வுக்கும் நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி
SLT முகாமைத்துவம்


Add new comment

Or log in with...