'அம்பன்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு | தினகரன்


'அம்பன்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு

அமைச்சரவை அனுமதி

“அம்பன்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைக்கு முன்வைத்த  ஆலோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்தவாரம் யாழ். மாவட்டத்தில் வீசிய அம்பன் புயலால் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழைச் செய்கை மற்றும் பப்பாசிச் செய்கை முற்றாக அழிவடைந்தன.

இதனால் பயிர்களை பயிரிட்ட விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்தை எதிர்கொண்டிருந்தனர்.

இதையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விவசாயிகள் தமது பயிரழிவுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிப்புக்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்;

இந்நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது பயிரழிவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைத்திருந்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்ரவை அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க அனுமதி அளித்துள்ளது.


Add new comment

Or log in with...