ஓ.பி.எஸ்., நலமுடன் உள்ளார்: மருத்துவமனை தகவல் | தினகரன்


ஓ.பி.எஸ்., நலமுடன் உள்ளார்: மருத்துவமனை தகவல்

மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ். நல்ல உடல்நலத்துடன் உள்ளதாகவும் அவர் சிகிச்சை முடிந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறித்த முதல்வர் இ.பி.எஸ். மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.


Add new comment

Or log in with...