இலங்கை வந்த பலருக்கு கொரோனா; கட்டார் விமானம் இடைநிறுத்தம்

இலங்கை வந்த பலருக்கு கொரோனா; கட்டார் விமானம் இடைநிறுத்தம்-Qatar Flight Scheduled to Bring Back Sri Lankans Temporarily Postponed

கட்டாரில் சிக்கிய இலங்கையர்களை நாளை (26) அழைத்து வரவிருந்த விமானம் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை (26) காலை விசேட விமானத்தின் மூலம் 273 இலங்கையர்கள் கட்டாரிலிருந்து வரவிருந்தனர்.

சர்வதேச உறவுகளுக்கான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், ஓய்வு பெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் குவைத் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த இலங்கையர் பலருக்கு கொவிட்-19 நோய் இருப்பது அடையாளப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குவைத் மற்றும் கட்டாரிலிருந்து வரவிருந்த விமானங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் குவைத்திலிருந்து திரும்பிய சுமார் 100 நோயாளிகளுக்கு கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கட்டார் சுகாதார அமைச்சின் அறிக்கைக்கு அமைய, கட்டாரில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இன்று இதுவரை அடையாளம் காணப்பட்ட 41 பேரும் குவைத்திலிருந்து வந்த இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாரில் 45,465 பேருக்கும், குவைத்திலுள்ள 21,967 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...