10ஆவது மரணம் பதிவு; 51 வயதான மற்றுமொரு பெண்

10ஆவது மரணம் பதிவு; 51 வயதான மற்றுமொரு பெண்-10th Death Reported In Sri Lanka-51-Yr-Old Women Returned From Kuwait

- இறுதியாக பதிவான 3 கொவிட்-19 மரணங்களும் பெண்களே
- இன்று அடையாளம் காணப்பட்ட 21 பேரும் குவைத்திலிருந்து வந்தவர்கள்

இலங்கையில் 10ஆவது கொவிட்-19 நோய் காரணமான மரணம் பதிவாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி குவைத்திலிருந்து வந்த பயாகலையைச் சேர்ந்த 51 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குறித்த பெண்ணுக்கு திடீரென மாரடைப்பு நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாகவும், பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பெண் இருதய நோயினால் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக கடந்த மே 04ஆம் திகதி 8ஆவது கொரோனா மரணம் பதிவாகியிருந்ததோடு, அது இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்த முதலாவது பெண் மரணமாக பதிவானது. அதனைத் தொடர்ந்து 9ஆவது மரணமாக இரண்டாவது பெண் மரணம் பதிவானதோடு, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை தவறானது எனத் தெரிவிக்கப்பட்டு அவரது மரணம் தொடர்பில் சர்ச்சைகளும் ஏற்பட்டிருந்தது.

அதற்கமைய, தற்போது மரணமான பெண் உள்ளிட்ட, இலங்கையில் இறுதியாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்த 3 பேரும் பெண்களாக காணப்படுகின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமான மரணங்கள்
1ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி, 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
2ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.
3ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி, 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
4ஆவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
5ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
6ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதி, 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்
7ஆவது மரணம், ஏப்ரல் 08ஆம் திகதி, 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
8ஆவது மரணம், மே 04ஆம் திகதி, 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
9ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதான, கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
10ஆவது மரணம், மே 25ஆம் திகதி, 51 வயதான, குவைத்திலிருந்து வந்த, பயாகலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர்அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இன்று (25) பிற்பகல் 5.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,148 இலிருந்து 1,162 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய இன்றையதினம் (25) இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிய 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 21 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இன்றையதினம் (25) இதுவரை அடையாளம் காணப்பட்ட 21 பேரும் குவைத்திலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 1,162 பேரில் தற்போது 457 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 695 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 09 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 79 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 1,148
குணமடைவு - 695

இன்று அடையாளம் - 21
இன்று குணமடைவு - 21
சிகிச்சையில் - 457
மரணம் - 09

No photo description available.

85%

மரணமடைந்தவர்கள் - 10
மே 25 - ஒருவர் (10)
மே 05 - ஒருவர் (09)
மே 04 - ஒருவர் (08)
ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 695
மே 25 - 21 பேர் (695)
மே 24 - 14 பேர் (674)
மே 23 - 40 பேர் (660)
மே 22 - 16 பேர் (620)
மே 21 - 20 பேர் (604)
மே 20 - 35 பேர் (584)
மே 19 - 10 பேர் (569)
மே 18 - 21 பேர் (559)
மே 17 - 18 பேர் (538)
மே 16 - 43 பேர் (520)
மே 15 - 32 பேர் (477)
மே 14 - 63 பேர் (445)
மே 13 - 16 பேர் (382)
மே 12 - 23 பேர் (366)
மே 11 - 22 பேர் (343)
மே 10 - 61 பேர் (321)
மே 09 - 20 பேர் (260)
மே 08 - 08 பேர் (240)
மே 07 - 17 பேர் (232)
மே 06 - 02 பேர் (215)
மே 05 - 19 பேர் (213)
மே 04 - 10 பேர் (194)
மே 03 - 12 பேர் (184)
மே 02 - 10 பேர் (172)
மே 01 - 08 பேர் (162)
ஏப்ரல் 30 - 18 பேர் (154)
ஏப்ரல் 29 - 02 பேர் (136)
ஏப்ரல் 28 - 08 பேர் (134)
ஏப்ரல் 27 - 06 பேர் (126)
ஏப்ரல் 26 - 02 பேர் (120)
ஏப்ரல் 25 - 09 பேர் (118)
ஏப்ரல் 24 - 02 பேர் (109)
ஏப்ரல் 23 - 02 பேர் (107)
ஏப்ரல் 22 - 03 பேர் (105)
ஏப்ரல் 21 - 04 பேர் (102)
ஏப்ரல் 20 - 02 பேர் (98)
ஏப்ரல் 19 - 10 பேர் (96)
ஏப்ரல் 18 - 09 பேர் (86)
ஏப்ரல் 17 - 09 பேர் (77)
ஏப்ரல் 16 - 05 பேர் (68)
ஏப்ரல் 15 - 02 பேர் (63)
ஏப்ரல் 14 - 05 பேர் (61)
ஏப்ரல் 13 - 00 பேர் (56)
ஏப்ரல் 12 - 02 பேர் (56)
ஏப்ரல் 11 - 00 பேர் (54)
ஏப்ரல் 10 - 05 பேர் (54) 
ஏப்ரல் 09 - 05 பேர் (49)
ஏப்ரல் 08 - 02 பேர் (44)
ஏப்ரல் 07 - 04 பேர் (42)
ஏப்ரல் 06 - 05 பேர் (38)
ஏப்ரல் 05 - 06 பேர் (33)
ஏப்ரல் 04 - 03 பேர் (27)
ஏப்ரல் 03 - 03 பேர் (24)
ஏப்ரல் 02 - 00 பேர் (21)
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 24 - 00 பேர் (02)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 1,162
மே 25 - 21 பேர் (1,162)
மே 24 - 52 பேர் (1,141)
மே 23 - 21 பேர் (1,089)
மே 22 - 13 பேர் (1,068)
மே 21 - 27 பேர் (1,055)
மே 20 - ஒருவர் (1,028)
மே 19 - 35 பேர் (1,027)
மே 18 - 11 பேர் (992)
மே 17 - 21 பேர் (981)
மே 16 - 25 பேர் (960)
மே 15 - 10 பேர் (935)
மே 14 - 10 பேர் (925)
மே 13 - 26 பேர் (915)
மே 12 - 20 பேர் (889)
மே 11 - 06 பேர் (869)
மே 10 - 16 பேர் (863)
மே 09 - 12 பேர் (847)
மே 08 - 11 பேர் (835)
மே 07 - 27 பேர் (824)
மே 06 - 29 பேர் (797)
மே 05 - 16 பேர் (768)
மே 04 - 37 பேர் (755)
மே 03 - 13 பேர் (718)
மே 02 - 15 பேர் (705)
மே 01 - 25 பேர் (690)
ஏப்ரல் 30 - 16 பேர் (665)
ஏப்ரல் 29 - 30 பேர் (649)
ஏப்ரல் 28 - 31 பேர் (619)
ஏப்ரல் 27 - 65 பேர் (588)
ஏப்ரல் 26 - 63 பேர் (523)
ஏப்ரல் 25 - 40 பேர் (460)
ஏப்ரல் 24 - 52 பேர் (420)
ஏப்ரல் 23 - 38 பேர் (368)
ஏப்ரல் 22 - 20 பேர் (330)
ஏப்ரல் 21 - 06 பேர் (310)
ஏப்ரல் 20 - 33 பேர் (304)
ஏப்ரல் 19 - 17 பேர் (271)
ஏப்ரல் 18 - 10 பேர் (254)
ஏப்ரல் 17 - 06 பேர் (244)
ஏப்ரல் 16 - 00 பேர் (238)
ஏப்ரல் 15 - 05 பேர் (238)
ஏப்ரல் 14 - 15 பேர் (233)
ஏப்ரல் 13 - 08 பேர் (218)
ஏப்ரல் 12 - 11 பேர் (210)
ஏப்ரல் 11 - 02 பேர் (199)
ஏப்ரல் 10 - 07 பேர் (197)
ஏப்ரல் 09 - ஒருவர் (190)
ஏப்ரல் 08 - 04 பேர் (189)
ஏப்ரல் 07 - 06 பேர் (186)
ஏப்ரல் 06 - 04 பேர் (180)
ஏப்ரல் 05 - 10 பேர் (176)
ஏப்ரல் 04 - 07 பேர் (166)
ஏப்ரல் 03 - 08 பேர் (159)
ஏப்ரல் 02 - 03 பேர் (151)
ஏப்ரல் 01 - 05 பேர் (148)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 02 பேர் (122)
மார்ச் 29 - 05 பேர் (120)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 06 பேர் (78)
மார்ச் 20 - 06 பேர் (72)
மார்ச் 19 - 12 பேர் (66)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 02 பேர் (06)
மார்ச் 12 - 02 பேர் (04)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்


Add new comment

Or log in with...