முஸ்லிம்கள் கடைப்பிடித்த பொறுமை, சகிப்புத்தன்மையில் அரசாங்கம் திருப்தியடைந்துள்ளது | தினகரன்

முஸ்லிம்கள் கடைப்பிடித்த பொறுமை, சகிப்புத்தன்மையில் அரசாங்கம் திருப்தியடைந்துள்ளது

புனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ஈத் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமரின் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

covid-19 தொற்று பரவும் நிலையில் முஸ்லிம் சமூகம் இஸ்லாத்தின் மூன்றாவது கடமையான புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இறை வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஈத் பெருநாளை அமைதியாக கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு எனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் நோற்ற நோன்பு மற்றும் இறை வழிபாடுகளை இறைவன் பொருந்திக் கொள்ள வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.

covid-19 தோற்று பரவுவதை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினதும் சுகாதார தரப்பினரும் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால் முன்னைய காலங்களைப் போலன்றி முஸ்லிம்கள் அமைதியாகவும் வீடுகளில் அடங்கியும் தமது கடமைகளைச் செய்து விட்டு ஈத் பெருநாளை கொண்டாடுகின்றனர். எமது நாடு மட்டுமன்றி முழு உலகும் இந்தப் இந்த பேரனர்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.

 இந்தப் பேரனர்த்தத்திலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்குமாறு இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு இந்த அனர்த்தத்தை வெற்றிகொள்ள உறுதிபூண வேண்டும். இக் காலகட்டத்தில் முஸ்லிம்கள் கடைப்பிடித்த பொறுமை, சகிப்புத்தன்மையை நான் மற்றும் எனது அரசாங்கமும் திருப்தி அடைந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

 இந்த நன்னாளில் இஸ்லாம் காட்டும் வழிகாட்டல்களின் பிரகாரம் உலகமும் எமது தாய்நாடு இந்த அனர்த்தத்திலிருந்து பாதுகாப்பை நாடி சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இந்த புனித நாளில் உங்கள் பிரார்த்தனைகளில் சுகாதாரத்துறையினர் பாதுகாப்புத் துறையினரை தியாகச் செயற்பாடுகளுக்கும் பிரார்த்தியுங்கள். உங்கள் அனைவருக்கும் எனது புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.


Add new comment

Or log in with...