'யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு பெருகும் ஏழு இடங்கள்' | தினகரன்


'யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு பெருகும் ஏழு இடங்கள்'

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்திற்கு உட்புறத்தில் மட்டும் ஏழு இடங்களில் டெங்கு நுழம்பு பெருகும் இடங்கள் காணப்படுவதனால் உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நேற;று முன்தினம் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

வடக்கு மாகாணத்துக்குட்பட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்கள், வைத்தியசாலைப் பணிப்பாளர் மாகாண வைத்திய அதிகாரிகளை  கடந்த வியாழக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் சந்தித்து சுகாதார நிலமை தொடர்பில் கேட்டறிந்தார்.

இதன்போதே மருத்துவர் கேசவன் குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டினார்.

இதன் பிரகாரம் வைத்தியசாலையில் டெங்கு பெருக்கத்துக்கான இடங்கள் காணப்படுகின்றன. அங்கிருந்து டெங்கு நோயாளரும் இனம் காணப்பட்டுள்ளதோடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் டெங்கால் பீடிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.

அதாவது மாவட்ட பூச்சியியல் ஆய்வு பிரிவினர் வைத்தியசாலையில் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் குறித்த விடயம் உறுதி செய்யப்படுகின்றது என்ற தகவலைத் தெரிவித்தனர்.

இதன்போது பதிலளித்த வடக்கு மாகாண ஆளுநர், குறித்த விடயம் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். தவறும் பட்சத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிப்பாளரிற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.

கந்தர்மடம் நிருபர்


Add new comment

Or log in with...