'5000 ரூபா' கொடுப்பனவு சில அரசியல்வாதிகள் இழுத்தடிப்பு | தினகரன்

'5000 ரூபா' கொடுப்பனவு சில அரசியல்வாதிகள் இழுத்தடிப்பு

மலையகத்தில் 5000 ரூபா நிவாரணம் வழங்குவதில் இழுத்தடிப்புகளும், கழுத்தறுப்புகளுமே இடம்பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவித்த குமார் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

பதுளையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

5000 ரூபா நிவாரண பணம் தம்மாலேயே வழங்கப்படுவதாக ஒரு சில மலையக அரசியல்வாதிகள் தம்பட்டம் அடித்துவருகின்றனர்.

நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பபடிவங்கள் 25 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சில இடங்களில் 5000 ரூபா கொடுப்பனவுக்காக பாலியல் ரீதியான இலஞ்சம் கோரப்படுகிறது.

இவ்வாறான சூழலில் நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் பிரதேச அரசியல் வாதிகளை ஈடுபடுத்த வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளதை வரவேற்பதாகவும் இனியாவது எந்தவித பாகுபாடுகளும் இன்றி பெருந்தோட்ட மக்களுக்கு 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படுமென எதிர்பார்பதாகவும் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...