உடன் அமுலாகும் வகையில் 6 SSP, 3 SP, 2 ASP களுக்கு இடமாற்றம் | தினகரன்


உடன் அமுலாகும் வகையில் 6 SSP, 3 SP, 2 ASP களுக்கு இடமாற்றம்

உடன் அமுலாகும் வகையில் 6 SSP, 3 SP, 2 ASP களுக்கு இடமாற்றம்-6 SSP-3 SP-2 ASP Transferred Immediately

சிரேஷ்ட, உதவி, பொலிஸ் அத்தியட்சகர் தரத்திலுள்ள 11 பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவையின் தேவையின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவ்விடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

6 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP), 3 பொலிஸ் அத்தியட்சகர்கள் (SP), 2 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் (ASP) ஆகிய 11 பேருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமையவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கத்துடனும் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

  • குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த, டப்ளியூ திலகரத்ன (SSP), அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம்.
  • அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக இருந்த டி.வி.பி. அஜித் ஹேமசிறி  (SSP), பொலிஸ் வித்தியாலய பணிப்பாளராக இடமாற்றம்.
  • பொலிஸ் வித்தியாலய பணிப்பாளராக இருந்த எச்.சீ.ஏ. புஷ்ப குமார (SSP), மேல் மாகாண புலனாய்வு பிரிவு பணிப்பாளராக இடமாற்றம்.
  • மேல் மாகாண புலனாய்வு பிரிவு பணிப்பாளராக இருந்த டி.ஜி.என்.டப்ளியூ.டீ. தல்துவ (SSP), பயங்கரவாத ஒழிப்பு பிரிவு பணிப்பாளராக இடமாற்றம்
  • பயங்கரவாத ஒழிப்பு பிரிவு பணிப்பாளராக இருந்த ஏ.ஆர்.பீ.ஜே. அல்விஸ் (SSP), குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக இடமாற்றம்
  • நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி பதவியிலிருந்த கே.ஜீ.எல். கீதால் (SSP),  விசேட விசாரணை பிரிவு பணிப்பாளராக இடமாற்றம்
PDF File: 

Add new comment

Or log in with...