மே மாத ரூ. 5,000 கொடுப்பனவுக்கு; சமுர்த்தி வங்கி மூலம் ரூ. 1,600 கோடி கடன்

மே மாத ரூ. 5,000 கொடுப்பனவுக்கு; சமுர்த்தி வங்கி மூலம் ரூ. 1,600 கோடி கடன்-Rs 16 million Loan to Distrubut Rs5000 Payment for May

கொவிட்-19 தொற்றுநோயால் வருமானத்தை இழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் நிவாரணமாக வழங்கப்படும் ரூபா 5,000 கொடுப்பனவை மே மாதத்திற்கு வழங்குவதற்காக ரூபா 25,720 மில்லியன் அவசியமாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆயினும் இதற்காக ரூபா 16,000 மில்லியனை (ரூபா 1,600 கோடி) கடனாக பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காக நிதியை பெற்றுக் கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை கவனம் செலுத்தியதோடு, இதற்காக மேலதிகமாக ரூபா 16,000 மில்லியனை நிதியாக திரட்ட, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்காக, குறுகிய கால கடனாக நிதி பெற அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள திறைசேரியின் செயலாளருக்கு அதிகாரத்தை வழங்குவது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களை மதித்து ஜூன் மாதத்திற்கான ரூபா 5,000 கொடுப்பனவு வழங்காதிருக்க அமைச்சரவை முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 தொற்றுநோயால் வருமானத்தை இழந்த சமுர்த்தி பெறுநர்கள் உட்பட குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏப்ரல் மாதத்தில் சுமார் ரூ. 2,500 கோடிக்கும் 3,000 கோடிக்கும் இடையிலான  செலவிடப்பட்டதாகவும், மே மாதத்திற்கு 51 இலட்ச்து 44 ஆயிரத்து 46 பேருக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (21) தெரிவித்திருந்தார். 


Add new comment

Or log in with...