Mercedes-Benz Sprinter Single Cab வாகனத்தை விநியோகம் செய்த DIMO

Mercedes-Benz Sprinter Single Cab வாகனத்தை விநியோகம் செய்த DIMO-DIMO delivers first all-new Mercedes-Benz Sprinter Single Cab
Colombo Logistics Group Consultant Major General Chagie P Gallage (Rtd) மற்றும் Colombo Port Services (Pvt) Ltd CEO Lasantha Soysa, DIMO Chairman & Managing Director Ranjith Pandithage யிடமிருந்து, புத்தம் புதிய Mercedes-Benz Sprinter Single Cab வாகனத்தின் திறப்பைப் பெற்றுக்கொள்கிறார். DIMO Group CEO Gahanath Pandithage, DIMO Mercedes-Benz Cluster Head Rajeev Pandithage and DIMO Director/CMO Asanga Ranasinghe ஆகியோரைக் காணலாம்.

இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு விநியோகஸ்தரான Diesel & Motor Engineering Plc (DIMO) நிறுவனம், புத்தம் புதிய Mercedes-Benz Sprinter வாகனத்தை  அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளது. உலகளாவிய ரீதியில் அதிகம் விற்பனையாகும், வியத்தகு வசதிகளுடன் கூடிய, ஏனைய நவீன ரக வாகனங்களின் மத்தியில் தன்னிகரற்று விளங்கும் Mercedes-Benz Sprinter, சரக்கு (Cargo) போக்குவரத்தில் புதிய அத்தியாயத்தினை ஆரம்பித்துள்ளது. இது அறிமுகப்படுத்தப்பட்ட தினத்தன்று, இந்த மாதிரியின் முதல் வாகனம், இலங்கையின் முன்னணி லொஜிஸ்டிக்ஸ் நிறுவனமான Colombo Logistics இற்கு கையளிக்கப்பட்டது.

Mercedes-Benz Sprinter Single Cab வாகனத்தை விநியோகம் செய்த DIMO-DIMO delivers first all-new Mercedes-Benz Sprinter Single Cab

இந்நிகழ்வில், Major General Chagie P Gallage (Rtd) - Group Consultant of Colombo Logistics, Lasantha Soysa - CEO of Colombo Port Services (Pvt) Ltd, Ranjith Pandithage - Chairman & Managing Director of DIMO, Gahanath Pandithage - Group CEO of DIMO, Asanga Ranasinghe - Director/CMO of DIMO, Rajeev Pandithage - Mercedes-Benz Cluster Head of DIMO மற்றும் Shamal Fernando - Business Unit Manager of (Mercedes-Benz Commercial Vehicles) DIMO ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

புதிய Sprinter Single Cab வாகனமானது, Mercedes-Benz இன் வர்த்தக ரீதியான வாகனங்களில், உலகளாவிய ரீதியில் மிகவும் வரவேற்பை பெற்ற மாதிரியாகும். 190bhp வரையான குதிரை வலு கொண்ட, 2.2 லீற்றர் இரட்டை டெர்போ என்ஜின் (twin turbo engine) மற்றும் மேலதிக 7 வேக தன்னியக்க கியர் பெட்டி (7 speed automatic gearbox) ஆகியவற்றுடன் கூடிய Sprinter வாகனம், அதிக சக்தி, குறைந்த பராமரிப்பு செலவு, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், இசைவாக்கமடையக்கூடிய தன்மை ஆகியவற்றுடன் சாரதிக்கும், பயணிகளுக்கும் மேம்படுத்தப்பட்ட சௌகரியத்தை வழங்குகின்றது. இந்த வாகனமானது எதிர்காலத்தில் இப்பிரிவு வாகனங்களுக்கான அளவுகோலாக இருக்குமென்பதால், இலங்கையில் உள்ள சரக்கு தள இயக்குனர்கள், கட்டுமான துறையினர், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் உள்ளிட்ட ஆற்றல்மிக்க வாடிக்கையாளர்களை, Sprinter Single Cab கவருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Mercedes-Benz Sprinter Single Cab வாகனத்தை விநியோகம் செய்த DIMO-DIMO delivers first all-new Mercedes-Benz Sprinter Single Cab

Major General Chagie P Gallage (Rtd) - Group Consultant of Colombo Logistics, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், "இந்த முதலீடு பிரதானமாக கொழும்பு துறைமுகத்தில் எங்கள் செயல்பாடுகளுக்கானது. இது ஒரு Mercedes-Benz என்பதாலும், DIMOவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாலும், புதிய Sprinter பல ஆண்டுகளுக்கு சீராக இயங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களிடம் ஏற்கனவே கார்கள் மற்றும் ஒரு லொறி உட்பட பல Mercedes-Benz வாகனங்கள் உள்ளன. DIMOவின் சேவை தரமானது நிரூபிக்கப்பட்ட திறன்களுடன் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்குமென உத்தரவாதமளிக்கப்படுகின்றது. மேலும், பல வருடங்களாக நாம் அவர்களுடன் நெருங்கிய உறவை கட்டமைத்துள்ளதால், ஒரு பங்காண்மை நிறுவனம் போன்றதாகும். DIMOவிலிருந்து அதிகமான Sprinters மற்றும் பிற வாகனங்களை கொள்வனவு செய்ய ஏற்கனவே திட்டமிட்டுள்ளோம். மொத்தத்தில், இது எங்களுக்கு ஒரு சிறந்த முதலீடாகும், மேலும் எதிர்காலத்திலும் DIMOவுடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் காத்திருக்கின்றோம், ” என்றார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய Rajeev Pandithage, Mercedes-Benz Cluster Head of DIMO, தனது கருத்தை பகிர்ந்தபோது, "புத்தம் புதிய Mercedes-Benz Sprinter Single Cab  முதல் விநியோகத்தை நாங்கள் காணும் இத்தருணத்தை நாம் மிகவும் பெருமையாக உணர்கின்றோம். Sprinter ஒரு வினைத்திறன் மிக்க மற்றும் நம்பகமான நடமாடும் தீர்வாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், பல வணிகங்களின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்யும். தற்போது பிரபலமாக இருக்கும் இந்த பல்துறை வாகனங்களில் ஒன்றை சொந்தமாக வைத்திருக்க எங்கள் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கவர்ச்சிகரமான அடிப்படை விலைக்கு இதை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம், ’’ என்றார்.

இன்று சந்தையில் உள்ள மற்ற உலகளாவிய வாகன வர்த்தக நாமங்களுடன் ஒப்பிடும்போது, ​​ Mercedes-Benz வர்த்தக ரீதியான வாகனங்கள் பணத்திற்கான உயர்ந்த பெறுமதியை வழங்குபவை என்றும், அதிகூடிய சுமைகளை ஏற்றக்கூடிய திறன் கொண்ட செயற்பாட்டு வினைத்திறனைக்கொண்டவை என்றும்,  சரக்கு போக்குவரத்தின் போது முகவும் பாதுகாப்பானவை என்றும் அறியப்படுகின்றது. பாரிய திட்டங்கள் மற்றும் வேகமாக விரிவடைந்துவரும் வீதி வலையமைப்பு காரணமாக இலங்கையில் மாறிவரும் வணிக சூழலில், நாடு சர்வதேச தரத்துக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதுடன் அந்த நிறுவனங்களை அதி நவீன போக்குவரத்து தீர்வுகளுடன் ஆயத்தப்படுத்த வேண்டும். இதனை வழங்கக்கூடிய ஆற்றல் கொண்ட வர்த்தக நாமமே Mercedes-Benz. DIMOவிடமிருந்து புதிய Sprinter வாங்குபவர்கள் 15,000km நீண்ட சேவை இடைவெளிகளுடன் கூடிய, பிரத்தியேக 5 ஆண்டு உத்தரவாதத்தால் பயன்

அடைவார்கள். மேலும், இந்த வாகனம் ரூபா. 6.9 மில்லியன் என்ற மிகவும் கட்டுப்படியாகும் அறிமுக விலையில் வழங்கப்படுகிறது.

Sprinter Single Cab இன் சுமையேற்றும் மேற்பரப்பானது கனமான, பருமனான திறந்த சரக்கு தளங்களையும், மொத்த பொருட்களையும் கொண்டு செல்வதற்கு போதுமான இடத்தை வழங்குகிறது. ஓட்டுநர் அமைவு நிலையின் புதிய எண்ணக்கருவானது, அதன் உயர் தரமான வடிவமைப்பு மற்றும் அதன் சிறந்த செயல்பாட்டு ஆகிய இரண்டையும் உறுதிப்படுத்துகிறது. 9.2 m² வரையான பரப்பளவு கொண்ட சுமையேற்றும் பகுதியானது, உயர்தர அலுமினிய சரக்கு பெட்டி சுவர்களால் வரையறை செய்யப்பட்டுள்ளது. இதுவொரு வலுவான சுமையேற்றும் மேற்பரப்பை உருவாக்குவதுடன், 1200 x 1000 mm அளவிலான இரண்டு ஏற்றுத்தட்டுகளை அனுமதிக்கின்றது.

புதிய Sprinter Single Cab, 9.2 m2 வரையான சரக்கு களஞ்சியப்படுத்தலுக்கான பகுதியுடன்  கூடிய, compact,  standard மற்றும் long, standard cab அல்லது double cab ஆகிய பல்வகைகளில் கிடைக்கின்றது. இதனை front, rear அல்லது four-wheel drive உடன், அதிகபட்சமாக அதிகாரமளிக்கப்பட்ட 3000kg, 3500kg, 4100kg மற்றும் 5000kg எடையுடன் கொள்வனவு செய்ய முடியும்.

வாகனம் மற்றும் உபகரண தெரிவுகளின் பல பிரிவுகளானது, அடிச்சட்டம் மற்றும் திறந்த தளத்தை போக்குவரத்து நோக்கத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க அனுமதிக்கின்றன. திறந்த தளத்தின் சுமையேற்றும் மேற்பரப்பு அதன் அதிகபட்ச அளவை,  நீண்ட வாகனத்தின் நீளம் மற்றும் standard cab உடன் அடைகிறது. தாங்கும் சுமையானது தீர்மானமிக்கதாக இருக்கும்போது, ​​5500kg எடைப்பிரிவுடன் வாகனத்தை செலுத்துவது சிறந்ததாகும். Standard cabin, மூவருக்கான இடவசதியை வழங்குவதுடன், double cabin இல், 7 பேர் வரையான சிறிய குழுவொன்று அமர முடியும். ஒவ்வொரு துறையின் குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப,   நிரூபிக்கப்பட்ட தரத்துடன் ஏராளமான வாகன உருவ அமைப்பு தீர்வுகளும் உள்ளன.

Sprinter Single Cab இன், மிகவும் சிறப்பியல்பு வாய்ந்த அம்சங்களில் ஒன்று அதன் பாதுகாப்பாகும்.  இதன் அடித்தளம் மிகவும் வலுவானதாகும்,  குறிப்பாக நிலையானதாகும், அதன் ஆக்கபூர்வமான வடிவமைப்பு மற்றும் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுமே இதற்கான காரணமாகும். ஓட்டுநர் உதவி அமைப்புகள், ஓட்டுநரின் வசதியை மேம்படுத்துகின்றன. இதன் மூலம் செயல்பாடுகளின் செயல்திறனை அதிகரிக்க உதவுகின்றன.

சாரதியின் தூக்ககலக்கத்தை கண்டறியும் திறன் மற்றும் நியம பக்க காற்றுவீச்சு உதவி அமைப்பு (standard side wind assistant, எக்டிவ் பிரேக் (active brake) உதவி அமைப்பு மற்றும் வீதி பக்கத்தை மாற்றும் போது கண்டறியும் உணர்கருவி (lane change detector) போன்ற அம்சங்களை இது உள்ளடக்கியுள்ளது. இந்த அமைப்புகள்,  3500kg இற்கு மேல் அதிகபட்ச  அதிகாரமளிக்கப்பட்ட நிறையை கொண்ட வாகனங்களின் நியம உபகரணங்களை உருவாக்குகின்றன. உயர் செயல்திறன் LED headlights, வீதியை அதிக வீச்சு மற்றும் பிரகாசத்துடன் ஒளிரச்செய்ய உதவுகின்றன.

DIMO தொடர்பில் 
நாட்டின் முதன்மையான வாகன விற்பனை மற்றும் வாகன  Diesel & Motor Engineering PLC (DIMO), சமூகத்தின் தேவைகளை அடையாளம் காணுவதில் எப்போதும் ஏனையோரை விட ஒரு படி மேல் உள்ளது. இதன் விளைவாக , DIMO அதன் உள்நாட்டு பலங்கள் மற்றும் திறன்களின் மூலம் உலகின் மிகவும் விரும்பப்படும் மற்றும் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட வர்த்தக நாமங்களுக்கு பெறுமதி சேர்க்கிறது. 1939 ஆம் ஆண்டில் முற்றிலும் வாகன விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட DIMO தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்துள்ளதோடு, தனது செயற்பாடுகளையும் விரிவுபடுத்தியுள்ளது.  2019 மார்ச் மாதம் வரையில் 1,750 ஊழியர்களை DIMO கொண்டுள்ளதுடன், அத்துடன் இந்நிறுவனத்தின் வருடாந்த வருமானமானது ரூபா 38.3 பில்லியன் (2018/2019) ஆகும்.


Add new comment

Or log in with...