வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 61ஆக அதிகரிப்பு

அனைத்து அரசாங்க வைத்தியர்களினதும் ஓய்வு பெறும் வயதெல்லையை 61ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

வாராந்த முடிவுகளை அறிவிக்கும் அமைச்சரவைக் கூட்டம் இன்று (21)  இடம்பெற்றபோது, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க வைத்தியர்கள், 60 வயது பூர்த்தியாகியவுடன் ஓய்வு பெற வேண்டிய நடைமுறை இதுவரை காலமும் இருந்தது. 

இதேவேளை, ஏனைய அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்தார்.


Add new comment

Or log in with...