திரவப்பால் உற்பத்தி வீழ்ச்சி | தினகரன்


திரவப்பால் உற்பத்தி வீழ்ச்சி

கொவிட்  19 தாக்கத்தினால் நாளாந்த பால் நுகர்வோரின் தேவை அதிகரித்த நிலையில் பாலுக்கான பெரும் தட்டுப்பாடும் நிலவுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் வெப்பத்துடன்  கூடிய காலநிலை நிலவுவதன் தாக்கத்தினால் மாவட்டத்தில் திரவப் பால் உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் சுமார் பத்தாயிரம் கால்நடைகளின் ஊடாக 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் லீற்றர் வரையான திரவப்பால் பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது காணப்படும்  காலநிலையின் தாக்கத்தினால் கால்நடை பண்ணைகள், மேய்ச்சல் தரைகளும் வரண்டு காணப்படுகின்றது.

இதனால்   10 ஆயிரம் லீற்றருக்கும் குறைந்த நிலையில் பால் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகள் பண்ணையாளர்களின் வருமானமும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது.

பனங்காடு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...