எதிர்ப்பவர்கள் வியக்கும் வகையில் என் அரசியல் பயணம் இருக்கும் | தினகரன்


எதிர்ப்பவர்கள் வியக்கும் வகையில் என் அரசியல் பயணம் இருக்கும்

என்னை எதிர்ப்பவர்கள் அனைவரும் வியக்கும் வகையில் என் அரசியல் பயணத்தை பயனுள்ளதாக்குவேன் என்று சட்டத்தரணியும் நுவரெலியா மாவட்ட சுயேட்சை வேட்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.  ஊடகச் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நான் ஏன் அரசியலில் இறங்கினேன் என்பது பற்றியும் ஏன் சுயேட்சையாக கோடரி சின்னத்தில் போட்டியிடுகிறேன் என்பது பற்றியும் நான் எவ்வாறு மக்களை சந்திக்கின்றேன், மக்கள் எப்படி என்னை சந்திக்கின்றார்கள் என்பது பற்றி பலரும் பல விதமாக கருத்துக்களை வெளியிடுகின்றார்கள்.

பலரது கருத்துக்கள் பாராட்டுக்குறியவையாக உள்ள நிலையில் ஒரு சிலரின் கருத்துக்கள் பயத்தினால் வெளிவருபவையாக உள்ளன. இவர்களுக்கெல்லாம் ஒரு வரியில் பதில் கூறுவதென்றால் என் தந்தை சாதித்தார் நானும் சாதிப்பேன் என்பதுதான்.

தலவாக்கலை குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...