ஒன்லைன் மூலம் விற்பனையில் சிறு விற்பனையாளர்கள்

ஒன்லைன் மூலம் விற்பனையில் சிறு விற்பனையாளர்கள்-Daraz Small sellers selling BIG

COVID-19 காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டம் மற்றும் Lockdown போன்றன, வர்த்தக நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், கொள்வனவு மற்றும் விற்பனை ஆகிய துறைகளிலும் எதிர்பாராத மாற்றங்கள் காணப்பட்டு வருகின்றன. பாரியளவிலான நவீன சந்தைகள் தங்களது விற்பனை முறைகளை மாற்றியமைப்பதில் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளன. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்கள் தமது விற்பனைகள் மற்றும் வர்த்தகங்களைத் தொடர்ந்தும் பேணுவதற்கு மாற்று வழிகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒன்லைன் விற்பனை, இந்த தொற்று நோய் காலப்பகுதிக்கு முன், வெறுமனே மொத்தச் சந்தையில் 1% மாத்திரமாகவே இருந்து வந்தது. எனினும், தற்போதய சூழ்நிலையில், கொள்வனவுகளும் விற்பனைகளும் மிகத் துரிதமாக பெரும் வளர்ச்சி கண்டு வருகின்றன. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள், தமக்கென சொந்த ஒன்லைன் தளம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள போதியளவு நிதி வசதி இல்லாமை, சிறந்த விநியோக பொறிமுறைகளைக் கையாளும் வசதிகள் காணப்படாமை, ஒன்லைன் மூலம் விற்பனை மேற்கொள்வது சம்பந்தமான போதிய அறிவு இன்மை என்பன இதில் சற்று தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சிக்கல்களை ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொள்ளும் வகையில், Daraz ஒன்லைன் சந்தைகளில் புதியதொரு அறிமுகமாக, மே மற்றும் ஜுன் மாதங்களில் 0% விற்பனைத் தரகுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, ஏற்கனவே உள்ள விற்பனையாளர்களுக்கும், புதிதாக இணைந்து கொள்ளும் விற்பனையாளர்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்படும். மேலும், Daraz விற்பனையாளர்களுக்கென ஒரு ஊக்குவிப்புத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இலங்கையில் ஒன்லைன் விற்பனை மூலம் நன்மைகளை அடைந்து கொள்ளவும், தமது வியாபாரங்களை இலத்திரனியல் வணிகத்திற்கு மாற்றிக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கிறது. அதற்கான ஊக்குவிப்பும் வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படுகிறது. இலங்கையின் மிகப் பெரிய இலத்திரனியல் வணிகத் தளம் என்ற வகையில் நிறுவனம் ரூபா 30 மில்லியன் வரையான சலுகைகளை  சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்குப் பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளது. இவற்றில் Daraz பல்கலைக்கழகத்தில் இலவசமாகப் பிரவேசித்தல் மற்றும் விற்பனையாளர்கள் தமது விற்பனையை ஒன்லைனில் அமைத்துக் கொள்வதற்குத் தேவையான அறிவைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் அது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வசதிகள் என்பனவாகும். காசுப் பாய்ச்சலிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதனால், வர்த்தக நிறுவனங்களுக்கு தமது விற்பனைகள் மூலம் கிடைக்கும் பணத்தை துரிதமாக இரண்டு மூன்று நாட்களுக்குள் அவர்களைச் சென்றடைய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் விற்பனையாளர்களுக்கு பொதி செய்யும் கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது. இவற்றுக்கு மேலதிகமாக, விற்பனையாளர்களுக்கு கிடைக்கும் மற்றுமொரு நன்மையாக நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்புத் திட்;டங்களின் ஊடாக பெருமளவு வாடிக்கையாளர்கள் விற்பனையாளர்களின் உற்பத்திகளைப் பார்வையிட வாய்ப்புக் கிடைக்கிறது.

இந்த நடவடிக்கைகளினால், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் வர்த்தக செயற்பாடுகளின் எதிர்காலத்தை அடைந்துகொள்ளலாம். இதற்கு நிறுவனத்தின் அளவு ஒரு பிரச்சினையாக அமைவதில்லை. அவர்களுக்காக சந்தை ஒன்று உருவாக்கப்பட்டு, களஞ்சிய மற்றும் விநியோக சேவைகளை இற்றைப்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல் கருவிகள் என்பன பெற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும், அவர்களது சந்தையை விருத்தி செய்து கொள்ளவும் இது ஒருவாய்ப்பாக அமைகிறது. ஏனெனில், Daraz தினமும் 10,000 க்கும் அதிகமான வீடுகளுக்கு தமது விநியோகங்களை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கையின் மிகச் சிறந்த ஷொப்பின் APP ஆகக் கருதப்படும், Daraz இன் யுPP ஊடாக வாடிக்கையாளர்கள் விற்பனையாளர்களுடன் இலகுவாக உரையாடவும் தொடர்புகளை மேற்கொள்ளவும் முடியும். Daraz in-APP SMART AI (செயற்கை அறிவை) பயன்படுத்துவதனால் கொள்வனவாளர்களுக்கு அவர்கள் மிகவும் விரும்பும் பொருட்களை கண்டுபிடிப்பதில் உதவியாக இருப்பதோடு, விற்பனையாளர் ஒருவராக Daraz உடன் இணையும் எந்தவொரு இலங்கையருக்கும் மிகச் சிறந்த நன்மைகளை இது பெற்றுக் கொடுக்கின்றது.

Daraz Sri Lanka வின் உத்தியோகபூர்வ இணைய தளம் இவை தொடர்பான மேலதிக தகவல்களைக் கொண்டுள்ளது.
Daraz இணைய தளத்தோடு விற்பனையாளர் ஒருவராக இணைந்து கொள்வது மிகவும் இலகுவானதும், சிரமமற்றதுமாகும். அது Daraz இல் விற்பனை செய்வது போன்றே இலகுவானது. Daraz உடன் இணையும் சகல சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் https://bit.ly/3bQz0Nl என்ற இடத்தில் Click செய்வதன் மூலம் மேற்கூறப்பட்ட சகல விற்பனை ஊக்குவிப்பு அனுகூலங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.


Add new comment

Or log in with...