சிசுவை மலசலகூடக் குழிக்குள் போட்ட தாய் கைது | தினகரன்


சிசுவை மலசலகூடக் குழிக்குள் போட்ட தாய் கைது

பிறந்த சிசுவை, வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட குற்றச்சாட்டில் அதன் தாயை  அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இச்சம்பவம் இன்று (20) மாலை இடம்பெற்றது.

நான்கு நாட்களுக்கு முன்னர் அப்பெண்ணுக்கு சிசு பிறந்துள்ளது. சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலக்கூடத்தின் குழிக்குள் தாய் போட்டுள்ளார்.

நான்கு நாட்களாகிய நிலையில் சிசுவின் உடல் அழுகி, அயலில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு துர்நாற்றம் வீசியது. இது தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டதுடன், தாயைக் கைது செய்தனர்.

சந்தேக நபரான பெண்ணின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)


Add new comment

Or log in with...