வீடியோவில் தோன்றிய யுவதிகள் பாகிஸ்தானில் கௌரவக் கொலை | தினகரன்


வீடியோவில் தோன்றிய யுவதிகள் பாகிஸ்தானில் கௌரவக் கொலை

இணையதளத்தில் பரவிய வீடியோ ஒன்றின் காரணமாக வடமேற்கு பாகிஸ்தானில் இரு பதின்ம வயது யுவதிகள் கௌரவக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் தெற்கு வசிரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் எல்லையில் உள்ள கிராமம் ஒன்றில் இந்த வார ஆரம்பத்தில் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த இருவரும் இளைஞர் ஒருவருடன் தோன்றிய கைபேசி மூலம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று ஊடகத்தில் பரவியதே கொலைகளுக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவில் தோன்றிய மற்றொரு பெண்ணின் உயிரை காப்பதிலும் பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தொலைதூரத்தில் இருக்கும் அந்த கிராமத்திற்கு குழு ஒன்றை அனுப்பி இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 16 மற்றும் 18 வயதுடைய யுவதிகளே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானில் சுமார் ஆயிரம் கௌரவக் கொலை சம்பவங்கள் நிகழ்வதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 


Add new comment

Or log in with...