மியன்மாரிலிருந்து 74 இலங்கையர்கள் வருகை | தினகரன்


மியன்மாரிலிருந்து 74 இலங்கையர்கள் வருகை

கொரோனா தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு திரும்ப முடியாமல், மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 74 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (16) வந்தடைந்துள்ளனர்.

மியன்மார் தேசிய விமான சேவைக்கு சொந்தமான MAI 8M611 எனும் விசேட விமானத்தில், அவர்கள் இன்று நண்பகல் 12.05 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த விமானம், மியன்மாரின் யங்கோன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்டிருந்தது.

இவ்வாறு வருகை தந்தோர், இராணுவத்தினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு கொரோனா தொற்றுநோய்க்கான அறிகுறிகள் காணப்படுகின்றதா என்பது தொடர்பிலும் சோதிக்கப்பட்டனர்.

இதன் பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக விசேட பஸ் வண்டியில் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
 


Add new comment

Or log in with...