வட்டியில்லா மாணவர் கடன் விண்ணப்ப இறுதி திகதி‌ நீடிப்பு‌

வட்டியில்லா மாணவர் கடன் விண்ணப்ப இறுதி திகதி‌ நீடிப்பு‌-Interest Free Student Loan Scheme-Deadline for Calling Applications Online

பட்டப்படிப்பு கற்கைநெறிகளை தொடர்வதற்காக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்‌ வழங்கும்‌ திட்டத்திற்கான விண்ணப்ப முடிவுத் திகதி காலவரையறையின்றி நீடிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சினால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வி, தொழில்‌ நுட்பம்‌ மற்றும்‌ புத்தாக்க அமைச்சினால்‌ 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளில்‌ க.பொ.த. (உ/த) பரீட்சைப்‌ பெறுபேறுகளின்‌ அடிப்படையில்‌ அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில்‌ பட்டப்படிப்பு கற்கைநெறிகளை தொடருவதற்காக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 4ஆவது தொகுதி மாணவர்களை இணைத்துக்‌ கொள்வதற்காக இணையதளம்‌ மூலம்‌ (Online) விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளது.

இதற்கான இறுதித் தினமாக மார்ச் 23ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும்‌ தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்‌ 19 தொற்று நிலைமையின்‌ காரணமாக இதன்‌ இறுதித் தினம்‌ காலவரையறையின்றி நீடிக்கப்பட்டுள்ளது.

உயர்‌ கல்விக்கு முக்கியத்துவம்‌ வழங்கும்‌ வகையில்‌ இதன்‌ இறுதி திகதி 2020 மே மாதம்‌ 20ஆம்‌ திகதி என மாணவர்‌ கடன்‌ பிரிவு தெரிவித்திருந்ததை இதன்‌ மூலம்‌ அறியத்தருகின்றோம்‌.

இந்த விண்ணப்பத்தாரர்களுக்கான நேர்முகப்‌ பரீட்சை நடவடிக்கைகள்‌ தற்பொழுது நாட்டில்‌ நிலவும்‌ கொவிட்‌-19 தொற்று நிலையை கவனத்தில்‌ கொண்டு Microsoft Teams மென்பொருள்‌ மூலம்‌ எதிர்வரும் ஜூன்‌ மாதம்‌ 01ஆம்‌ திகதி முதல் நடத்துவதற்கு ஏற்பாடுகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பான முழுமையான விபரங்கள்‌ விண்ணப்பதாரர்களின்‌ மின்னஞ்சல்‌ முகவரிக்கு மின்னஞ்சல்‌ மூலம்‌ அனுப்பி வைக்கப்படவுள்ளன.


Add new comment

Or log in with...