குருணாகல் போதனா பணிப்பாளரின் இடமாற்றம் இடைநிறுத்தம் | தினகரன்


குருணாகல் போதனா பணிப்பாளரின் இடமாற்றம் இடைநிறுத்தம்

குருணாகல் போதனா பணிப்பாளரின் இடமாற்றம் இடைநிறுத்தம்-Transfer of Sarath Weerabandara Reversed

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரபண்டாரவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை தேர்தல் ஆணைக்குழு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் சட்டங்களை மீறி குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதால், அவ்விடமாற்ற உத்தரவை இடைநிறுத்தியுள்ளதாக, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட இந்த இடமாற்ற உத்தரவை வழங்குவதற்கு முன்னர்,  பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படவில்லை எனவும், இதன் மூலம் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் குருணாகல் போதனா வைத்தியசாலையின் ஊழியர்களால், சரத் வீரபண்டாரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு சுகாதார அமைச்சிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் (13) கடமைக்கு திரும்பிய சரத் வீரபண்டாரவுக்கு எதிராக வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...