ராஜித சேனாரத்னவுக்கு மே 27 வரை விளக்கமறியல்

ராஜித சேனாரத்னவுக்கு மே 27 வரை விளக்கமறியல்-Rajitha Senaratne Remanded Till May 27

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிர்வரும் மே 27ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (13) மாலை குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜரானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரை இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

வெள்ளை வேன் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட பிணையை, கொழும்பு மேல் நீதிமன்றம் இரத்து செய்ததை அடுத்து, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, குற்றப் புலனாய்வு பிரிவுக்கு (CID) கொழும்பு பிரதான நீதவான்  லங்கா ஜயரத்ன உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...