CIDயில் சரணடைந்த ராஜித சேனாரத்ன கைது

CIDயில் சரணடைந்த ராஜித சேனாரத்ன கைது-Rajtiha Senaratne Arrested After Surrendered to CID

முன்னாள் அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜரானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

வெள்ளை வேன் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட பிணையை, கொழும்பு மேல் நீதிமன்றம் இரத்து செய்ததை அடுத்து, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, குற்றப் புலனாய்வு பிரிவுக்கு (CID) கொழும்பு பிரதான நீதவான்  லங்கா ஜயரத்ன உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...