தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 5,000 கொடுப்பனவு; பிரச்சினை இருந்தால் நிவர்த்திக்கப்படும்

சுகாதார அமைச்சர் பவித்ரா நேற்று நுவரெலியா விஜயம்

பெருந்தோட்டத்  தொழிலாளர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

 சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று (12) நுவரெலியா மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

 நுவரெலியா மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தோட்டத் தொழிலாளர்கள் 5,000 ரூபாவுக்கு குறைவான சம்பளம் பெறும் பட்சத்தில், குறைவான தொகையை ஈடுசெய்யும் வகையில் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வகையிலேயே சுற்று நிருபத்தில் ஏற்பாடுள்ளதென அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் என்னிடம் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் ஜனாதிபதி செயலணியுடனும் கலந்துரையாடி, ஏதேனும் தவறு இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் மீண்டும் அமைச்சரவைப் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பவித்ரா தெரிவித்தார்.

அமைச்சரின் நேற்றைய விஜயத்தின் போது,  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நுவரெலியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் சுகாதார அமைச்சருக்கு தெளிவுபடுத்தினர். அதற்காக தேவைப்பாடும் உதவிகளையும் குறிப்பிட்டனர். அத்துடன், மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளிலுள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினர்.

ஹட்டன் சுழற்சி நிருபர்  


Add new comment

Or log in with...