சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க | தினகரன்

சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க

சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க-Major General Sanjeewa Munasinghe Assumes Duty as Secretary of Health Ministry

சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், கதிரியக்க விசேட வைத்திய நிபுணர், மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, இன்று (11) சுகாதார அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க-Major General Sanjeewa Munasinghe Assumes Duty as Secretary of Health Ministry

இந்நிகழ்வில், சுகாதார சேவைகள் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்ரானி ஜயவர்தன, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க-Major General Sanjeewa Munasinghe Assumes Duty as Secretary of Health Ministry

Add new comment

Or log in with...