குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மே 11இல் திறப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அன்றாட நடவடிக்கைகள்  நாளை மறுதினம் (11) முதல் ஆரம்பிக்கப்படுமென்று, அத்திணைக்களம் தெரிவித்தது.

இருப்பினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொது விடுமுறை நாட்களை தவிர, ஏனைய நாட்களில் திறந்திருக்குமென்பதோடு, சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் பொதுமக்கள் ஊரடங்குச் சட்ட காலத்தில்  கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளையும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கமைய, ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்களை ஒப்படைக்கும் நடவடிக்கை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை முன்னெடுக்கப்படும்.

சாதாரண சேவையின் கீழ், கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பப்படிவங்களை ஒப்படைக்கும் நடவடிக்கை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை முன்னெடுக்கப்படுமென, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்தது.

அத்தோடு கடவுச்சீட்டு தகவல்களில் திருத்தம், குடியுரிமையை பதிவு செய்தல், இந்திய மற்றும் சீன வம்சாவளியை சேர்ந்த நபர்களின் குடியுரிமை தொடர்பான விடயங்கள்,  கடவுச்சீட்டு தரவு பக்கத்தில் தகவல்களை உள்ளீடு செய்தல் மற்றும் கடவுச்சீட்டு தரவு பக்கம் மற்றும் ஏனைய பக்கங்களின் அரபு மொழிபெயர்ப்பை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை முன்னெடுக்கப்படுமென, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்தது.

அதற்கமைய சேவைகளும் அதன் நடைமுறைகள் தொடர்பான விபரங்களும் வருமாறு...


Add new comment

Or log in with...