மகளிர் பிரிவுக்கு ஸஹ்ரான் பயிற்சி வழங்கியதாக விடுதியொன்றில் சோதனை | தினகரன்


மகளிர் பிரிவுக்கு ஸஹ்ரான் பயிற்சி வழங்கியதாக விடுதியொன்றில் சோதனை

மகளிர் பிரிவுக்கு ஸஹ்ரான் பயிற்சி வழங்கியதாக விடுதியொன்றில் சோதனை-Raid Arayampathy Selvanagar Selvanagar East Palamunai-Kattankudy

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, செல்வாநகர் கிழக்கு, பாலமுனை பிரதேசத்திலுள்ள வாடகை விடுதி ஒன்று பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.

மகளிர் பிரிவுக்கு ஸஹ்ரான் பயிற்சி வழங்கியதாக விடுதியொன்றில் சோதனை-Raid Arayampathy Selvanagar Selvanagar East Palamunai-Kattankudy

இன்று (08) வெள்ளிக்கிழமை பிற்பகல் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்ததுடன் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (CID) கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கொழும்பில் இருந்து நேற்று 07 வியாழக்கிழமை வருகை தந்து சுற்றிவளைக்கப்பட்ட மேற்படி விடுதி பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் முழுமையாக சோதனையிடப்பட்டது.

அத்தோடு கொழும்பிலிருந்து வருகைதந்த குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் குறித்த விடுதியின் உரிமையாளருடன் நடாத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையில், உரிமையாளரின் அனுமதியுடன் குறித்த விடுதிக் கட்டடம், காணி என்பன முழுமையாக சோதனையிடப்பட்டது.

மகளிர் பிரிவுக்கு ஸஹ்ரான் பயிற்சி வழங்கியதாக விடுதியொன்றில் சோதனை-Raid Arayampathy Selvanagar Selvanagar East Palamunai-Kattankudy

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாசிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்தாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டு, சோதனையிடப்பட்டது.

கடற்கரைக்கு அருகாமையில் காணப்படும் குறித்த விடுதி சோதனையிடப்பட்ட போது குற்றப் புலனாய்வுத்துறை, பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் என பலரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன், காத்தான்குடி  விஷேட நிருபர் - பழுலுல்லாஹ் பர்ஹான்)


Add new comment

Or log in with...