சிறிய, நடுத்தர வர்த்தகர்களை ஊக்குவிக்க Daraz செயற்றிட்டம்

சிறிய, நடுத்தர வர்த்தகர்களை ஊக்குவிக்க Daraz செயற்றிட்டம்-Daraz initiates Seller Stimulus programme to revive Sri Lankas SMEs

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு ரூபா 30 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான உதவிகள்

கொவிட்-19 தொற்று காரணமாக, நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக மற்றும் பொருளாதார நிலைகளினால், பல்வேறு வர்த்தகங்களும் பெரும் இடையூறுகளை எதிர்நோக்கி வருகின்றன.

குறிப்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நிறுவனங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. அத்தியாவசிய சேவைகள் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்தாலும் கூட, இலங்கையில் 500,000 க்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பல்வேறு வர்த்தகங்களும் அடங்கியுள்ளன.

அவ்வாறானதொரு பிரிவுக்கு, சரியான முறையில், நீண்டகால, நிலையானதொரு தீர்வைப் பெற்றுக்கொடுக்காத சந்தர்ப்பங்களில் மொத்த தேசிய உற்பத்தியில் 52% வரை பங்களிப்புச் செய்யும் இந்தப் பிரிவு பெரிதும் பாதிப்படையக் கூடும்.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களின் தேவைகளை நன்குணர்ந்த Daraz ஸ்ரீலங்கா நிறுவனம், இத்தருணத்தில், ‘ஒன்றாக உறுதியாக’ என்ற தொனிப்பொருளில் வர்த்தகர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

சகல பிரிவுகளிலும் பாதிப்படைந்துள்ள அனைத்து விதமான வர்த்தகங்களுக்கும் உதவிகளைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் இந்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தகர்களை ஊக்குவிக்கும் இந்த வேலைத் திட்டத்தின் மூலம், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு நிதி மற்றும் வர்த்தக ரீதியிலான சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதோடு, அவர்களது விற்பனையை அதிகரித்து காசுப்பாய்ச்சலை அதிகரிக்கும் வகையில் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்படவிருக்கிறது.

இந்த வேலைத் திட்டத்தின் அடிப்படையில், உள்நாட்டு வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை Daraz ஊடாக ஒன்லைன் தளத்திற்கு கொண்டு வருமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றனர். அதற்கமைய பல்வேறு விதிமுறைகளின் ஊடாக ரூபா 30 மில்லியன் வரையிலான சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க நிறுவனம் எதிர்பார்க்கிறது.

அந்த வகையில் Daraz ஊடாக விற்பனைகளை மேற்கொள்ளும் விற்பனையாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு தரகுக் கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது. அத்துடன், வர்த்தகர்களுக்கு அவர்கள் விற்பனை செய்து கிடைக்கும் பணத்தை மிகக் குறுகிய காலத்தில் அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, Daraz பல்கலைக்கழகம் ஊடாக, வியாபாரங்களுக்கு கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை இலவசமாகப் பெற்றுக்கொடுக்கவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒன்லைன் வர்த்தக தளம் ஒன்றை எவ்வாறு துரிதமாக உருவாக்கிக் கொள்வது, விற்பனைகளை எவ்வாறு விரைவாக அதிகரித்துக் கொள்வது என்பது பற்றியும் அவர்கள் அறிந்துகொள்ளவும் முடியும்.

மேலும், பொதி செய்யும் உபகரணங்கள், கருவிகளுக்குரிய கட்டணங்கள் அனைத்தையும் Daraz இக்காலப்பகுதியில் நீக்கியுள்ளதனால் விற்பனையாளர்களுக்கு தமது செலவினங்கள் மேலும் குறைவடைவதற்கு இது காரணமாக அமைந்து விடுகிறது.

இந்த விடயம் பற்றிக் கருத்து வெளியிட்ட Daraz ஸ்ரீ லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரக்கீல் பெனாண்டோ, ‘சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை முடிந்தளவு அவசரமாக ஆரம்பிக்க வேண்டிய தேவைப்பாட்டை நாம் காண்கின்றோம். அதேவேளை, பாதுகாப்பு செயற்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஒன்லைன் தளம் ஒன்றில் தமது விற்பனைகளைக் கொண்டு செல்வதே இக்காலப்பகுதியில் மிகச்சிறந்ததொரு தீர்வாக அமைந்திருக்கும். இலங்கையின் மிகப் பெரிய ஒன்லைன் வர்த்தக தளம் என்ற வகையில், Daraz நிறுவனம் இதனை தனது பொறுப்பாகக் கருதி இந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கும், இதன் மூலம் வர்த்தகத் துறைக்கு உதவிகளையும், ஆரம்ப செயற்பாடுகளையும் பெற்றுக்கொடுக்கவும் எதிர்பார்க்கின்றது’ என்று கூறினார்.

Daraz ஊடாக ஒன்லைன் தளம் ஒன்றில் தமது வர்த்தகங்களை ஆரம்பிக்க எதிர்பார்க்கும் அல்லது Daraz உடன் இணைந்துகொள்ள எதிர்பார்க்கும் வர்த்தகர்களுக்கு விசேட தகவல்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் தகவல் மையம் ஒன்றை Daraz ஆரம்பித்துள்ளது. bit.ly/3bQz0Nl என்பதை Click செய்வதன் மூலம் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.


Add new comment

Or log in with...