அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை ஏப்ரல் 11 முதல்

அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை ஏப்ரல் 11 முதல்-NIC Last Digit Procedure Will Be Applied Only From May 11

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற வேளையில், தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டுச் செல்லும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலாகும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (04) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட குறித்த நடைமுறை, இவ்வாரத்தின் 4 தினங்கள், விடுமுறையாக இருப்பதன் காரணமாக அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு,

ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும் இயல்வு வாழ்க்கையை மீள கொண்டுவருதல் எவ்வாறு நிகழும்?
மேலதிக விளக்கம்

01. ஊரடங்கு உத்தரவு எப்போது செயல்படுத்தப்படுகிறது?

 • கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மீள அறிவிக்கும் வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்.
 • ஏனைய மாவட்டங்களில் இன்று (04) முதல் மே 06 புதன்கிழமை வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை. இந்த மாவட்டங்களில் மே 06, புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு மீண்டும் மே 11, திங்கள் காலை 5.00 மணி வரை தொடரும்.

02. ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளபோது இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகள் வழமைக்கு திரும்புவது எப்போது?

 • கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளபோது இயல்பு வாழ்க்கை வழமைக்கு வருவது மே 11 திங்கட்கிழமை முதல்.
 • இந்த திட்டம் இதற்கு முன்னர் இன்று (04) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாரம் விடுமுறை நாட்கள் 04 உள்ளதன் காரணமாக, அது மே 11 இற்கு ஒத்திவைக்கப்பட்டது.

03. இயல்பு வாழ்க்கையை மீள கொண்டுவருவதன் அடிப்படை விடயங்கள் நிகழ்வது எப்படி?

 • கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் உள்ள அரச, தனியார் ஆகிய இரு துறை நிறுவனங்களும் மே 11 திங்கள் முதல் திறக்கப்பட வேண்டும்.
 • இதற்கான திட்டங்களை தற்போது முதல் உருவாக்க நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 • நிறுவனங்களை திறந்து பணிகளை மேற்கொள்ளும் போது கொவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுவதை நிறுவனத் தலைவர்கள் உறுதிசெய்தல் வேண்டும்.
 • தனியார் துறை நிறுவனங்கள் காலை 10.00 மணிக்கு திறக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 • இரு பிரிவிலும் பணிக்கு அமர்த்தப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை நிறுவனத் தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
 • போக்குவரத்து பஸ்கள் மற்றும் புகையிரதங்களிலான பயணிகள் போக்குவரத்து, அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு மட்டுமே.

01. ஊரடங்கு உத்தரவு இருக்கின்றபோதிலும் எந்த நோக்கங்களுக்காக வீட்டை விட்டு வெளியேற முடியும்?

 • அத்தியாவசிய சேவைக்காக பணிகளுக்குச் செல்பவர்களைத் தவிர, ஏனைய மக்கள், நோயைத் தடுக்கும் பொருட்டான பணிகளுக்கு உதவும் வகையில், வீட்டிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 • அத்தியாவசிய பொருட்கள், உணவு மற்றும் மருந்து போன்றவற்றை வாங்க மட்டுமே அவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.

02. தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய வீட்டை விட்டு வெளியேறும் அனுமதி எந்தெந்த பகுதிகளில் செல்லுபடியாகும், எப்போதிலிருந்து?

 • ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் மட்டுமே.
 • மே 11 திங்கள் முதல்
 • ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்போது இது பொருந்தாது.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட போதிலும், மேற்படி ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் மக்கள் தேவையில்லாமல் ஒன்றுகூடமாட்டார்கள் என அரசாங்கம் நம்புகிறது.

ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், பொருளாதாரம் மற்றும் பொதுமக்கள் வாழ்க்கையை இயல்புக்கு கொண்டுவரப்படுவதோடு, இந்த கட்டுப்பாடுகளின் முக்கிய நோக்கம் வைரஸ் பரவாமல் தடுக்க மக்களை அணிதிரட்டுவதைக் கட்டுப்படுத்துவதாகும்.

மேற்படி வேலைத் திட்டம் தொடர்பான முந்தைய அறிவிப்புகளில் உள்ள நிபந்தனைகள் மாற்றமடையாது.


Add new comment

Or log in with...