வாள் வெட்டில் பிரதேச சபை உறுப்பினர் காயம் | தினகரன்


வாள் வெட்டில் பிரதேச சபை உறுப்பினர் காயம்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வாள்   வெட்டுக்கு இலக்காகி, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நேற்று (29) மாலை மோட்டார் சைக்கிளில் வருகை தந்தோர், பிரதேச சபை உறுப்பினர் மீது சரமாரியாக வாள் வெட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர்,  சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அத்தோடு குறித்த பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர் சிறு காயங்களுடன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மறவன்புலவு வட்டார பிரதேச சபை உறுப்பினரான அரியகுட்டி  நிமலரூபன் என்பவரே சம்பவத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை மறவம்புலவு  மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த வாள்வெட்டுக்கு இலக்கான நபர் மறவன்புலவில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர்)
 


Add new comment

Or log in with...