பிரபல பொலிவூட் நடிகர் இர்பான் கான் காலமானார் | தினகரன்


பிரபல பொலிவூட் நடிகர் இர்பான் கான் காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பொலிவூட் நடிகர் இர்பான் கான் தனது 53ஆவது வயதில் இன்று (29)  உயிரிழந்துள்ளார்.

பொலிவூட் நடிகரான இர்பான் கான், 1988ஆம் ஆண்டு வெளிவந்த சலாம் பாம்பே என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் வில்லன் குணச்சித்திர வேடம் என்று அனைத்திலும் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் பொலிவூட் மட்டுமல்லாது, 'லைஃப் ஆஃப் பை', ஜுராசிக் வேர்ல்டு போன்ற ஹொலிவூட்  படங்களிலும் நடித்துள்ளார். அத்தோடு, விளம்பரப் படங்களிலும் மாடலிங் செய்து வந்தார்.

இவர் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக நேற்றிரவு அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து,  அவர் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு, பொலிவூட் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Add new comment

Or log in with...