கொரோனா தொற்றிய 226 கடற்படையினர் அடையாளம்

கொரோனா தொற்றிய 226 கடற்படையினர் அடையாளம்-226 Navy Tested Positive for COVID19

வெலிசறை முகாமில் 147பேர்; விடுமுறையில் சென்ற 79 பேர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 622 பேர் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் 235 பேர் என, தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இன்று (29) காலை 10.00 மணியளவில் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இதேவேளைஇதுவரை அடையாளம்  226 கடற்படை வீரர்கள் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 147 பேர் வெலிசறை கடற்படை முகாமில் இருந்தவர்கள் எனவும், எஞ்சிய 79 பேர் விடுமுறையில் சென்றிருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 481 பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 134 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், தற்போது நாட்டின் எந்தவொரு அவசர சிகிச்சைப் பிரிவிலும் (ICU) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் சிகிச்சை பெறவில்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, இறுதியாக கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி இலங்கையில் கொரோனா தொடர்பான மரணம் பதிவாகியிருந்தது.


Add new comment

Or log in with...