இ.போ.ச. பஸ் ஊழியர்களுக்கு சுகாதார வசதிகளை வழங்க ஏற்பாடு

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் இ.போ.ச.  பஸ் வண்டிகளின் சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை  எடுக்க, மின்சக்தி, வலுசக்தி மற்றும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் குறித்த அமைச்சு இன்று (28)  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இ.போ.ச. பஸ் வண்டிகளின் சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் முகக் கவசங்கள், கையுறை, கைகளைத் தூய்மையாக்கும் கிருமிநீக்கி ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான சவால்களை எதிர்நோக்கும் பஸ்  வண்டிகளின் சாரதிகள், நடத்துனர்களின் சேவைகளை மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்தோடு, முடியுமான வரையில் அவர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவும் உரிய அதிகாரிகளுக்கு, அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சில பிரதேசங்களில் தனியார் போக்குவரத்துச் சேவை இன்மையால், குறித்த தொழிற்சங்கத்துடன் கலந்துரையாடி, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கு, அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக, குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...