O/L பெறுபேறு மீள் திருத்தம் பாடசாலை ஆரம்பித்தவுடன்

தற்போது வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மீள் திருத்தம் செய்வதாயின், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதற்காக விண்ணப்பிக்க முடியுமென, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு இதுவரையில் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதன் பின்னர் மீள் திருத்தம் செய்ய எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு,  அதற்காக விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளில் ஏதேனும் சிக்கல் காணப்படுமாயின்,   011 27 84 208,  011 27 84 537, 011 31 88 350 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ள முடியும். அத்தோடு, 1911 எனும் இலக்கம் மூலமும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு, டிசம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரண பரீட்சையில் 556,256 மாணவர்கள் தோற்றியிருந்ததோடு, அவர்களில் 73.84 வீதமானோர் க.பொ.த. உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

இம்முறை 10,346 மாணவர்கள் 09 ஏ சித்திகளை பெற்றுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 


Add new comment

Or log in with...