தே.அ.அட்டை, ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை காண்பிக்கும் முறை (VIDEO) | தினகரன்

தே.அ.அட்டை, ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை காண்பிக்கும் முறை (VIDEO)

ஆவணங்களை கைகளில் எடுத்து பார்ப்பதன் மூலமும், முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதன் மூலமும் சமூக இடைவெளி பேணப்படாமை காரணமாக மேற்படி முறையின் அடிப்படையில் ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளிச்செல்ல நாளை (28) முதல் அனுமதி வழங்கப்படவுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அமுல்படுத்தப்படும் இந்நடைமுறை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது மாத்திரம் அமுலில் இருக்கும் என, பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் கடந்த மார்ச் 23ஆம் திகதி தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் மே 04ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏனைய மாவட்டங்களில் நாளை (28) முதல் மே 02 வரை அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்

அதற்கமைய வீதிகளில் பாதுகாப்பு கடைமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தமது அடையாள அட்டை அல்லது ஊரங்குச் சட்ட அனுமதிப்பத்திரத்தை காண்பிக்கும் சுகாதார நடைமுறையை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

எனவே குறித்த நடைமுறையைப் பேணி சமூக இடைவெளியைப் பேணுவதோடு, பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த வகையில் தேசிய அடையாள அட்டையின் குறித்த இறுதி இலத்தை கொண்டுள்ளவர்கள் மட்டும் உரிய நாளில் அனுமதிக்கப்படுவர்.

திங்கட்கிழமை:- அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 1 அல்லது 2 என்ற இலக்கத்தை கொண்டவர்கள்
செவ்வாய்க்கிழமை:- அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3 அல்லது 4 என்ற இலக்கத்தை கொண்டவர்கள்
புதன்கிழமை:- அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 5 அல்லது 6 என்ற இலக்கத்தை கொண்டவர்கள்
வியாழக்கிழமை:- அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தை கொண்டவர்கள்
வெள்ளிக்கிழமை:- அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 9 அல்லது 0 என்ற இலக்கத்தை கொண்டவர்கள்

வெளியில் செல்லும்போது, கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...