502 சுகாதாரத்துறை அதிகாரிகளை சுகாதார பரிசோதகராக்க நடவடிக்கை

முறையான சேவைகளில் ஈடுபடுத்தப்படாது சம்பளம் பெற்று வரும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் 502 பேரை பொதுச் சுகாதார பரிசோதனை சேவைக்கு உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பிரதமரின் பாராளுமன்ற இணைப்புச் செயலாளர் குமாரசிறி ஹெட்டிகே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். ஒருவருட பொது சுகாதாரத்துறை டிப்ளோமா பயிற்சியை பெற்றுக் கொண்டபின் சுகாதாரத்துறை அதிகாரிகளாக சேவைக்கு நியமிக்கப்பட்டுள்ள மேற்படி 502 பேரும் இதுவரை முறையான உத்தியோகபூர்வ பணிகளுக்கு ஈடுபடுத்தப்படாமல் பொதுவான சேவைகளில் ஈடுபடுவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியிலுள்ள நட்புறவும் சீர்குலைந்து காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...