பாவனைக்கேற்ப மின் கட்டணம் அறவிடப்படும்

தற்போது கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில், மின்கட்டணம் அறவிடப்படும்போது, பயன்படுத்தப்படும் மின்சார அலகுகளுக்கு மாத்திரமே மின்கட்டணம் அறவிடப்படுமென,  மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த அமைச்சு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

மின்கட்டணப் பட்டியலில் உள்ளவாறே கட்டணம் அறவிடப்படும் என்பதோடு, மேலதிகமாக கட்டணம் அறவிடப்படாது. அத்தோடு,  மின் துண்டிப்புக்கான சிவப்பு அறிவித்தல் விடுக்கப்படாது எனவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அதிக மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் அநாவசியமாக கவலையடையத் தேவையில்லை என்றும் குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணம் செலுத்துவதற்கான பட்டியல் கிடைத்தவுடன், விரைவாக மின்கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களிடம், மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.  


Add new comment

Or log in with...