சிகை அலங்கார நிலையங்கள், சிறு உணவகங்களுக்கு பூட்டு

சிகை அலங்கார நிலையங்களையும், வைத்தியசாலைகளுக்கு அருகிலுள்ள சிறு உணவு விற்பனை நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தினால் இன்று (22) பிற்பகல் வௌியிடப்பட்ட ஊடக அறிவிப்பிலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்தார்.

பொதுமக்களுடைய சுகாதார பாதுகாப்பையும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி அரசாங்கம் பல்வேறு  ஒழுங்கு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் முச்சக்கர வண்டிகளில் உச்சபட்சம் இரு பயணிகளுக்கு மாத்திரம் பயணிக்க அனுமதி வழங்கப்படுவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.


Add new comment

Or log in with...