குடியேறிகளுக்கு தடை விதிக்க ட்ரம்ப் முடிவு | தினகரன்

குடியேறிகளுக்கு தடை விதிக்க ட்ரம்ப் முடிவு

அமெரிக்காவில் வெளிநாட்டவர் குடியேறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படும் என, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

உலக நாடுகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அத்துடன் மக்களை வீடுகளுக்குள் முடக்கி, கடுமையான பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்குச் சட்டத்தினால், மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.  கொரோனாவின் தாக்கம் முடிந்த பிறகு, இதனை சரிசெய்து வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது ஒவ்வொரு நாட்டுக்கும் மிகப்பெரிய சவாலான விடயம்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படவுள்ளது.

கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும், அமெரிக்க மக்களின் வேலையை பாதுகாக்கும் விதமாகவும், குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் உத்தரவில் கையெழுத்திட உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுமார் 08 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42,514 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...