கொழும்பு தேசிய வைத்தியசாலையினால் தொலைபேசி இலக்கங்கள் | தினகரன்


கொழும்பு தேசிய வைத்தியசாலையினால் தொலைபேசி இலக்கங்கள்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் கிளினிக் உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக 0113 61 87 24, 076 818 51 57  அல்லது, 0112 69 11 11 எனும் இலக்கங்கள் மூலமாக தொடர்புகொள்ள முடியும் என, தேசிய வைத்தியசாலையின் பிரதி சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் டபிள்யூ.கே. விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இச்சேவையானது, திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...